தேசிய செய்திகள்

தடுப்பூசி பணியில் நடைபெறும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்: மாயாவதி + "||" + End politics, time for everyone to gain from vaccination: Mayawati

தடுப்பூசி பணியில் நடைபெறும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்: மாயாவதி

தடுப்பூசி பணியில் நடைபெறும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்: மாயாவதி
மக்கள் பலனடையும் வகையில் தடுப்பூசி பணியில் நடைபெறும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.
லக்னோ, 

கொரோனா தடுப்பூசி தயாரிப்பது மற்றும் தடுப்பூசி போடுவது தொடர்பான சர்ச்சை, அரசியல், குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகள் போன்றவை நாட்டில் நிகழ்ந்து வருகின்றன. இதன் காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் இப்போது தடுப்பூசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம், அதன் நன்மைகளை மக்களுக்கு எடுத்துச் செல்வதற்கான, முழுமையான முயற்சி அவசியம் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “தடுப்பூசி உற்பத்தி தொடர்பாக எவ்வளவோ அரசியலும், சர்ச்சையும் செய்தாகி விட்டது. அதனால் மக்கள் நிறைய அனுபவித்து விட்டனர். இத்தகைய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம். அதன்மூலம் தடுப்பூசி பணியால் மக்கள் அனைவரும் பலன் அடைவார்கள்” என்று மாயாவதி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி மெகா முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது
தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று 6-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இந்த முகாமில் 2-வது தவணை தடுப்பூசி போடுகிறவர்களுக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
2. கொரோனா தடுப்பூசி விவகாரம்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகம்
கொரோனா தடுப்பூசி விவகாரம்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகம்.
3. “புதுச்சேரியில் விரைவில் 100% தடுப்பூசி செலுத்தப்படும்” - தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை
புதுச்சேரி விரைவில் 100% பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலமாக மாறும் என துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
4. அசைவ, மதுபிரியர்கள் வசதிக்காக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமைக்கு மாற்றம்
அசைவ, மதுபிரியர்கள் வசதிக்காக மெகா தடுப்பூசி முகாம் இனி சனிக்கிழமை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
5. இம்பாலில் தடுப்பூசி போட்டால் டி.வி., செல்போன் பரிசு
இம்பாலில் கொரோனா தடுப்பூசி போட்டால் குலுக்கல் முறையில் டி.வி., செல்போன் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.