திரிபுரா: 2 கிராமங்களில் முழுமையாக தடுப்பூசி போட்டு சாதனை


திரிபுரா: 2 கிராமங்களில் முழுமையாக தடுப்பூசி போட்டு சாதனை
x
தினத்தந்தி 22 Jun 2021 8:16 PM GMT (Updated: 2021-06-23T01:50:53+05:30)

திரிபுராவில் 2 கிராமங்களில் உள்ள அனைத்து தகுதியான பயனாளிக்கும் முழுமையாக தடுப்பூசி போட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

அகர்தலா, 

திரிபுரா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கான 2 நாள் சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. 

இதில், வடக்கு திரிபுரா மாவட்டம் மங்கள்காலி கிராம பஞ்சாயத்திலும், செபாகிஜலா மாவட்டம் பூர்ண சண்டிகார் கிராம பஞ்சாயத்திலும் தகுதியுள்ள அனைவருக்கும் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டதாக முதல்-மந்திரி பிப்லப்குமார் தேவ் தெரிவித்தார்.

இதுபோல், மாநிலம் முழுவதும், தகுதியுள்ள அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என்று அவர் கூறினார். அந்த 2 பஞ்சாயத்துகளிலும் மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரத்து 485 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Next Story