மராட்டிய மாநிலத்தில் ஒரே நாளில் 5.52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


மராட்டிய மாநிலத்தில் ஒரே நாளில் 5.52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 22 Jun 2021 10:04 PM GMT (Updated: 2021-06-23T03:34:36+05:30)

மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5.52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மும்பை,

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்றது. யோகா தினத்தையொட்டி இந்த தடுப்பூசி போடும் திருவிழா நடந்தது. 18 வயதுக்கு முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக போடும் பணி நடந்தது.

இந்த தடுப்பூசி திருவிழாவில் மத்திய பிரதேசத்தில் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டு இருந்தார்கள். அடுத்ததாக கர்நாடகத்தில் 10.67 லட்சத்திற்கூம் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தது. இதன்மூலம் ஒரே நாளில் அதிகம் தடுப்பூசி போடப்பட்ட மாநிலத்தில் மத்திய பிரதேசம் முதலிடமும், கர்நாடக மாநிலம் 2-வது இடமும் பெற்றது.

அந்த வகையில் நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான மராட்டிய மாநிலத்திலும், தற்போது தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 5 லட்சத்து 52 ஆயிரத்து 909 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை மொத்தம் 2.85 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மராட்டிய அரசு கூறியுள்ளது.

Next Story