வருகிற ‘செப்டம்பரில் ‘நீட்’ தேர்வு?


வருகிற ‘செப்டம்பரில் ‘நீட்’ தேர்வு?
x
தினத்தந்தி 23 Jun 2021 2:24 AM GMT (Updated: 2021-06-23T07:54:24+05:30)

நடப்பு கல்வி ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

புதுடெல்லி,

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ‘நீட்’ நுழைவுத்தேர்வு மூலம் நடந்து வருகிறது. இந்த தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

இதற்கிடையே நடப்பு கல்வி ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இதேபோல் ஜே.இ.இ. மெயின் தேர்வு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் கொரோனா பரவல் குறைவதை பொறுத்தே ‘நீட்’ தேர்வு நடத்தப்படும் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.

Next Story