இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது


இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது
x
தினத்தந்தி 23 Jun 2021 4:00 AM GMT (Updated: 2021-06-23T09:32:41+05:30)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது வைரஸ் பரவல் வெகுவாக குறைந்துள்ளது. குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. நேற்று 42,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்றை பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,00,28,709 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 2.67 சதவீதமாக உள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 1,358 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,90,660 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 68,817 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,89,94,855 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 96.56 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,43,194 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

Next Story