மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அடுத்த 3 நாட்களில் 39 லட்சம் தடுப்பூசி வழங்கப்படும் - மத்திய அரசு தகவல்


மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அடுத்த 3 நாட்களில் 39 லட்சம் தடுப்பூசி வழங்கப்படும் - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 23 Jun 2021 9:23 AM GMT (Updated: 23 Jun 2021 9:23 AM GMT)

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அடுத்த 3 நாட்களில் 39 லட்சம் தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 21 ஆம் தேதி முதல் புதிய தடுப்பூசி திட்டத்தின் படி, மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக  வழங்கி வருகிறது. 

இந்த நிலையில், மத்திய அரசு இதுவரை 29 கோடியே 68 லட்சத்து 27 ஆயிரத்து 450 கொரோனா  தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. தற்போது ஒரு கோடியே 92 லட்சத்து 465 தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன.

காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில்,  விரயமானது உள்பட மொத்தம் 27 கோடியே 76 லட்சத்து 26, ஆயிரத்து 985 டோஸ் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அடுத்த 3  நாட்களில் கூடுதலாக 39 லட்சத்து 7 ஆயிரத்து 310  டோஸ்கள் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story