மராட்டியத்தில் 21 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு


மராட்டியத்தில் 21 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 23 Jun 2021 3:00 PM GMT (Updated: 23 Jun 2021 3:00 PM GMT)

மராட்டியத்தில் 7 மாவட்டங்களில் 21 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கண்டறியப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில்  21 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார். ராஜேஷ் தோப் மேலும் கூறுகையில், “ 
மராட்டியத்தில் 7 மாவட்டங்களில் 21 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை கொரோனா, பாதிக்கப்படுவோரின் எதிர்ப்பு சக்தியை குறைந்து விடுகிறது.

டெல்டா வகை கொரோனா கண்டறியப்படுவோரின் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தி வருகின்றோம்.  அவர்களின் பயண விவரங்கள், தொடர்பு கண்டறிதல், தடுப்பூசி போட்டுள்ளார்களா? என அனைத்து விவரங்களையும் சேகரித்து வருகிறோம்.

புதிய வகை கொரோனாவால் இதுவரை உயிரிழப்பு ஏற்படவில்லை. இந்த வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிலர் குணமடைந்துள்ளனர். புதிய வகையால் இதுவரை குழந்தைகள் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

Next Story