கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகள் திறப்பு குறித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி

கா்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளை திறப்பதில் எந்த குழப்பமும் இல்லை என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு கல்லூரிகளை திறக்கலாம் என்று நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாகவும், இந்த விஷயத்தில் அரசுக்கு எந்த குழப்பமும் இல்லை எனவும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது;-
“பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். இந்த மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். பள்ளி-கல்லூரிகளை திறப்பதில் அரசுக்கு எந்த குழப்பமும் இல்லை.
முதலில் கல்லூரிகள் திறக்கப்படும். அதன் பிறகு உயர்நிலை பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடக்க பள்ளி குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் பள்ளிகள் திறக்கப்படாது. இந்த விஷயத்தில் அரசு மிகுந்த கவனமுடன் செயல்படும். மாணவர்களின் உடல் நலன் தான் அரசுக்கு முக்கியம்.”
இவ்வாறு சுதாகர் கூறினார்.
Related Tags :
Next Story