சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து மம்தா மனு- கொல்கத்தா ஐகோர்ட்டில் இன்று விசாரணை


சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து மம்தா மனு- கொல்கத்தா ஐகோர்ட்டில் இன்று விசாரணை
x
தினத்தந்தி 24 Jun 2021 3:25 AM GMT (Updated: 2021-06-24T08:55:20+05:30)

நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதியில், பா.ஜ.க.,வின் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதை எதிர்த்து, மம்தா பானர்ஜி கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கொல்கத்தா,

சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சியின் மிக அபாரமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது என்பது. இதனை அடுத்து மம்தா பானர்ஜி மீண்டும் அம்மாநில முதல்-மந்திரியாக பதவியேற்றார்

இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்க மாநிலத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்ற போதிலும் அக்கட்சியின் தலைவரும் முதல்-மந்திரியான மம்தா பானர்ஜி நந்திகிராம் என்ற தொகுதியில் தோல்வி அடைந்தார். அந்த தொகுதியில் பாஜகவின் சுவேந்துஅதிகாரி என்பவர் வெற்றி பெற்றார் .

இந்நிலையில், சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து கொல்கத்தா ஐகோர்ட்டில் மம்தா பானர்ஜி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “நந்திராம் தொகுதியில் பணப்பட்டுவாடா, லஞ்சம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டே சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றிருக்கிறார். 1951-ம் ஆண்டுமக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123-வது பிரிவானது இந்த நடவடிக்கைகளுக்கு தடை விதித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, நந்திகிராம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போதும் முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்’’ என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இந்த நிலையில் நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதியில், பா.ஜ.க.,வின் சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து,  மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனு கொல்கத்தா ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் முடிவை பொறுத்தே மம்தா பானர்ஜி மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story