"விரைவில் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி" - எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தகவல்


விரைவில் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி - எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தகவல்
x
தினத்தந்தி 24 Jun 2021 9:24 AM GMT (Updated: 24 Jun 2021 9:24 AM GMT)

செப்டம்பர் - அக்டோபர் மாதங்களுக்குள் குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசி செயல்பாட்டிற்கு வரும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை உருவானால் அது குழந்தைகளை அதிகளவில் தாக்கலாம் என கூறப்படும் நிலையில், குழந்தைகள் நலன் மீது அதீத அக்கறை செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி குறித்த ஆராய்ச்சியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்துவது தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி,  2ம் மற்றும் 3ம் கட்ட பரிசோதனை நடத்த கடந்த மே 12 ஆம் தேதி இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்திருந்தது.  இதனால் இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசி கிடைக்க வாய்ப்பிருப்பதாக ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பாரத் பயோடெக் நிறுவனத்துடன் சேர்த்து பிற நிறுவனங்களும் குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த பரிசோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Next Story