கொரோனா 3வது அலையை எதிர்கொள்ளும் திட்டங்களை வகுக்க உத்தவ் தாக்கரே உத்தரவு


கொரோனா 3வது அலையை எதிர்கொள்ளும் திட்டங்களை வகுக்க உத்தவ் தாக்கரே உத்தரவு
x
தினத்தந்தி 24 Jun 2021 12:28 PM GMT (Updated: 24 Jun 2021 12:28 PM GMT)

மராட்டியத்தில் கொரோனா 3வது அலையை எதிர்கொள்ளும் திட்டங்களை வகுக்க சுகாதார துறைக்கு முதல் மந்திரி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.



புனே,

நாட்டில் கொரோனாவின் முதல் அலை மற்றும் 2வது அலையில் அதிகம் பாதிப்பிற்கு உள்ளானது மராட்டியம்.  இந்த மாநிலத்தின் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன.

மராட்டியத்தில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.  இதேபோன்று சமூக இடைவெளியை பின்பற்றுதல், முக கவசம் அணிதல் ஆகியவற்றை கடைப்பிடிக்க மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா 3வது அலை ஏற்பட கூடிய சாத்தியம் உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.  இதனை முன்னிட்டு மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இதன்படி, அனைத்து மாவட்டங்களுக்கும் சேர்த்து, கொரோனா 3வது அலையை எதிர்கொள்ளும் திட்டங்களை வகுக்கும்படி சுகாதார துறைக்கு அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இதற்காக ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், சத்தாரா, சாங்லி, கோலாப்பூர், ஹிங்கோலி ஆகிய மாவட்ட ஆட்சியர்களிடம் முதல் மந்திரி பேசினார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில சுகாதார மந்திரி ராஜேஷ் தோப் உள்பட உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


Next Story