ஆந்திர பிரதேசத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு வாரிய தேர்வுகள் ரத்து


ஆந்திர பிரதேசத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு வாரிய தேர்வுகள் ரத்து
x
தினத்தந்தி 24 Jun 2021 3:07 PM GMT (Updated: 2021-06-24T20:37:22+05:30)

ஆந்திர பிரதேசத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு வாரிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.


விஜயவாடா,

கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்புக்கான வாரிய தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது.  இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் 12ம் வகுப்புக்கான மாநில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் தேர்வு பற்றிய இறுதி முடிவு எட்டப்படாத சூழல் காணப்பட்டது.  இதுபற்றி மாநில கல்வி மந்திரி ஆடிமுலப்பு சுரேஷ் இன்று கூறும்பொழுது, ஆந்திர பிரதேசத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான வாரிய தேர்வுகளை அரசு ரத்து செய்து அறிவித்துள்ளது என தெரிவித்து உள்ளார்.


Next Story