தேசிய செய்திகள்

இந்தியாவின் தற்போதைய நிலையை நாடகமாடி திசை திருப்புகிறார் - பிரதமர் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு + "||" + Rahul Gandhi blames PM for dramatizing current situation of India

இந்தியாவின் தற்போதைய நிலையை நாடகமாடி திசை திருப்புகிறார் - பிரதமர் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவின் தற்போதைய நிலையை நாடகமாடி திசை திருப்புகிறார் - பிரதமர் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பிரதமர் மோடி இந்தியாவின் தற்போதைய நிலையை நாடகமாடி திசை திருப்புவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,

‘டாய்கேத்தான்-2021 ’ என்ற பெயரில் நடைபெற்ற பொம்மைகள் கண்காட்சியின் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலிக்காட்சி வழியாக கலந்துரையாடினார். அப்போது அவர், “இந்தியாவின் திறன்கள், கலை, கலாசாரம், சமூகத்தை உலகம் புரிந்து கொள்ள விரும்புகிறது. நாட்டின் திறன்கள், யோசனைகளின் உண்மையான பிம்பத்தை உலகுக்கு முன்வைக்கும் பொறுப்பை இளைய தலைமுறையினர், தொடக்க நிறுவனங்கள் மனதில் கொள்ள வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.

இதையொட்டி மோடியை சாடி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் துறையினர் வேலை இல்லாத நிலையை சந்தித்து வருகின்றனர். பிரதமர், இந்தியாவின் தற்போதைய நிலையை நாடகமாடி கவனத்தை திசை திருப்புகிறார். அவர் எதிர்காலத்துடன் விளையாடுகிறார்” என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய அணியில் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் சேர்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது.
2. இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இலங்கை அணிக்கு 227 ரன்கள் வெற்றி இலக்கு
இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு 227 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 41,383 பேருக்கு தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41 ஆயிரத்து 383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை - அமெரிக்க தூதரகம் வெளியிட்டது
விவசாயிகள் போராட்டத்தை முன்னிட்டு இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு அந்நாட்டின் தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
5. இந்தியாவில் பள்ளிகளைத் திறப்பதென்றால், தொடக்கப் பள்ளியில் இருந்து திறப்பது சரியாக இருக்கும் - ஐசிஎம்ஆர் தலைவர் பேட்டி
இந்தியாவில் பள்ளிகளைத் திறப்பதென்றால், தொடக்கப் பள்ளியில் இருந்து திறப்பது சரியாக இருக்கும் என்று ஐசிஎம்ஆர் தலைவர் கூறினார்.