போர்ட் பிளேர் அருகே கடலில் மூழ்கிய கப்பல் - 9 மாலுமிகள் பத்திரமாக மீட்பு


போர்ட் பிளேர் அருகே கடலில் மூழ்கிய கப்பல் - 9 மாலுமிகள் பத்திரமாக மீட்பு
x
தினத்தந்தி 24 Jun 2021 10:30 PM GMT (Updated: 2021-06-25T04:00:30+05:30)

போர்ட் பிளேர் அருகே கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து 9 மாலுமிகளை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.

போர்ட் பிளேர்,

போர்ட் பிளேர் துறைமுகத்தில் இருந்து தென்கிழக்கே 30 மைல் தொலைவில் கங்கா-1 என்ற சிறிய கப்பல் ஆபத்தில் சிக்கியிருப்பதாக இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் கிடைத்தது. கப்பலின் என்ஜின் அறைக்குள் வெள்ளம் புகுந்தால் கப்பல் மூழ்கத் தொடங்கி உள்ளது. 

உடனே விரைந்து சென்ற கடலோர காவல்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 9 மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மூழ்கும் கப்பலை கடலோர காவல்படை கப்பலுடன் கட்டி இழுத்து வந்தனர். ஆனால், சிங் தீவு அருகே கங்கா-1 கப்பல் கடலில் மூழ்கிவிட்டது.

Next Story