ஜம்மு காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் - ப.சிதம்பரம்


ஜம்மு காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் - ப.சிதம்பரம்
x
தினத்தந்தி 25 Jun 2021 4:05 AM GMT (Updated: 25 Jun 2021 4:05 AM GMT)

ஜம்மு காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து வழங்கி அதன் பிறகு தேர்தல் நடத்த வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட காஷ்மீர் அரசியல் தலைவர்களுடன் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்குமாறு தலைவர்கள் வலியுறுத்தினர்.

காஷ்மீரில் தொகுதி மறுவரையறை முடிந்த பிறகு, சட்டசபை தேர்தல் நடத்துவது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்ததாக முசாபர் உசைன் பெய்க் கூறினார்.

இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கட்சிகள் மற்றும் தலைவர்கள் முதலில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், பின்னர் தேர்தல்களை நடத்த விரும்புகிறார்கள். மத்திய அரசின் பதில் முதலில் தேர்தல் மற்றும் பின்னர் மாநிலம் என்று கூறுகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து வழங்கி அதன் பிறகு தேர்தல் நடத்த வேண்டும். குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டுமே தவிர, வண்டியால் குதிரையை இழுக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.

Next Story