இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைவு


இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைவு
x
தினத்தந்தி 25 Jun 2021 4:44 AM GMT (Updated: 2021-06-25T10:26:15+05:30)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51ஆயிரத்து 667 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது வைரஸ் பரவல் வெகுவாக குறைந்துள்ளது. குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. நேற்று 54,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்றை பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

அதன்படி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51 ஆயிரத்து 667 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,01,34,445 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 1,329 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,93,310 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 64,527 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,91,28,267 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 96.56 சதவீதமாக உள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,12,868 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாட்டில் இதுவரை 30 கோடியே 79 லட்சத்து 48 ஆயிரத்து 774 டோஸ்கள் போடப்பட்டு இருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

Next Story