நாடகமாடி கவனத்தை திசை திருப்பி ‘நாட்டின் எதிர்காலத்துடன் மோடி விளையாடுகிறார்’ - ராகுல் காந்தி


நாடகமாடி கவனத்தை திசை திருப்பி ‘நாட்டின் எதிர்காலத்துடன் மோடி விளையாடுகிறார்’ - ராகுல் காந்தி
x
தினத்தந்தி 25 Jun 2021 5:16 AM GMT (Updated: 25 Jun 2021 5:16 AM GMT)

நாடகமாடி கவனத்தை திசை திருப்பி நாட்டின் எதிர்காலத்துடன் பிரதமர் மோடி விளையாடுகிறார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி, 

‘டாய்கேத்தான்-2021 ’ என்ற பெயரில் நடைபெற்ற பொம்மைகள் கண்காட்சியின் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலிக்காட்சி வழியாக கலந்துரையாடினார். 

அப்போது அவர், “இந்தியாவின் திறன்கள், கலை, கலாசாரம், சமூகத்தை உலகம் புரிந்து கொள்ள விரும்புகிறது. நாட்டின் திறன்கள், யோசனைகளின் உண்மையான பிம்பத்தை உலகுக்கு முன்வைக்கும் பொறுப்பை இளைய தலைமுறையினர், தொடக்க நிறுவனங்கள் மனதில் கொள்ள வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.

இதையொட்டி மோடியை சாடி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில் அவர், “குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் துறையினர் வேலை இல்லாத நிலையை சந்தித்து வருகின்றனர். பிரதமர், இந்தியாவின் தற்போதைய நிலையை நாடகமாடி கவனத்தை திசை திருப்புகிறார். அவர் எதிர்காலத்துடன் விளையாடுகிறார்” என கூறி உள்ளார்.

Next Story