மராட்டியம்: மக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 3 கோடியாக அதிகரிப்பு


மராட்டியம்: மக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 3 கோடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 25 Jun 2021 10:13 AM GMT (Updated: 25 Jun 2021 10:13 AM GMT)

நாட்டிலேயே முதல் மாநிலமாக மராட்டியத்தில் 3 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

மும்பை,

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலில் நாடு முழுவதும் மக்களுக்கு இதுவரை 30 கோடியே 79 லட்சத்து 48 ஆயிரத்து 744 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டிலேயே முதல் மாநிலமாக மராட்டியத்தில் இதுவரை 3 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. நேற்று வரை அம்மாநிலத்தில் 2 கோடியே 97 லட்சத்து 23 ஆயிரத்து 637 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருந்தது. இன்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்ட எண்ணிக்கை 3 கோடியாக அதிகரித்துள்ளது.

இன்று மதியம் 2 மணி நிலவரப்படி மராட்டியத்தில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 3 கோடியே 27 ஆயிரத்து 217 ஆக அதிகரித்துள்ளது. 

Next Story