டெல்லி எல்லையில் விவசாயிகள் நாளை டிராக்டர் பேரணி


டெல்லி எல்லையில் விவசாயிகள் நாளை டிராக்டர் பேரணி
x
தினத்தந்தி 25 Jun 2021 10:49 AM GMT (Updated: 25 Jun 2021 10:49 AM GMT)

டெல்லி-காசியாபாத் எல்லையில் விவசாயிகள் நாளை டிராக்டர் பேரணி நடத்த உள்ளனர்.

டெல்லி,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த நவம்பர் 27ஆம் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் இன்றுடன் 6 மாதங்களை நிறைவு செய்கிறது. விவசாயிகள் போராட்டம் நாளை 7-வது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறது.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற அனைத்துகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நாளை 7-வது மாதத்தில் நுழைகிறது. 6 மாதங்கள் போராட்டம் நிறைவடைந்து 7-வது மாதம் தொடங்க உள்ள நிலையில் விவசாயிகள் சார்பில் நாளை டிராக்டர் பேரணி நடைபெற உள்ளது.

’விவசாயத்தை காப்போம், ஜனநாயக நாளை காப்போம்’ என்ற தலைப்பில் இந்த டிராக்டர் பேரணி நடைபெறுகிறது. நாளை நடைபெற உள்ள டிராக்டர் பேரணிக்கான ஏற்பாடுகள் டெல்லி எல்லைகளான சிங்கு, திக்ரி, காசியாபாத் ஆகிய பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

நாளை டிராக்டர் பேரணியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் டெல்லி எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Next Story