காஷ்மீர் என்கவுண்ட்டர்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சரண்


காஷ்மீர் என்கவுண்ட்டர்:  லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சரண்
x
தினத்தந்தி 25 Jun 2021 1:00 PM GMT (Updated: 2021-06-25T18:30:09+05:30)

காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி துப்பாக்கியை ஒப்படைத்து சரண் அடைந்துள்ளார்.

சோபியான்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

நீண்டநேரம் நடந்த இந்த தாக்குதலில் ஒரு பயங்கரவாதியை வீரர்கள் சுட்டு கொன்றனர்.  இந்நிலையில், லஷ்கர் இ தொய்பா என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் பயங்கரவாதி தன்னிடம் இருந்த ஏ.கே. 56 ரக துப்பாக்கியை வீரர்களிடம் ஒப்படைத்து விட்டு சரண் அடைந்துள்ளார்.

எனினும் தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Next Story