கொரோனாவுக்கு மருத்துவர்கள் உயிரிழப்பு: முதல் அலை - 748; 2வது அலை - 776


கொரோனாவுக்கு மருத்துவர்கள் உயிரிழப்பு:  முதல் அலை - 748; 2வது அலை - 776
x
தினத்தந்தி 25 Jun 2021 3:49 PM GMT (Updated: 25 Jun 2021 3:49 PM GMT)

கொரோனா 2வது அலையில் 776 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளனர் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்து உள்ளது.


புதுடெல்லி,

நாட்டில் கொரோனா 2வது அலையில் அதிக எண்ணிக்கையில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் காணப்பட்டன.  இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா 2வது அலையில் 776 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளனர்.  அவர்களில் அதிக அளவாக பீகார் (115) முதல் இடத்தில் உள்ளது.

இதனை தொடர்ந்து டெல்லி (109), உத்தர பிரதேசம் (79), மேற்கு வங்காளம் (62), ராஜஸ்தான் (44), ஜார்க்கண்ட் (39) மற்றும் ஆந்திர பிரதேசம் (40), ஒடிசா (34) மற்றும் மராட்டியம் (23) ஆகியவை உள்ளன.

தென்னிந்திய மாநிலங்களில் தமிழகம் (50), கேரளா (24) மற்றும் கர்நாடகா (9) ஆகியவை அடுத்தடுத்த எண்ணிக்கையில் உள்ளன.  கொரோனாவின் முதல் அலையில் 748 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளனர் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்து உள்ளது.


Next Story