மராட்டியத்தில் 3 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை தகவல்


மராட்டியத்தில் 3 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 25 Jun 2021 8:30 PM GMT (Updated: 2021-06-26T02:00:26+05:30)

நாட்டிலேயே முதல் முறையாக மராட்டியத்தில் 3 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மும்பை,

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ந் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இந்த பணியில் இடையே சற்று தொய்வு ஏற்பட்டாலும் நாட்டிலேயே முதல் மாநிலமாக மராட்டியத்தில் நேற்று 3 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி மராட்டியத்தில் மொத்தம் 3,00,27,217 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாகவும், அதில் 2,42,37,793 முதல் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாகவும் மராட்டிய மாநிலத்தின் சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் வியாஸ் தெரிவித்துள்ளார். 

மராட்டிய மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 10 லட்சம் தடுப்பூசிகளை செலுத்தக்கூடிய கட்டமைப்பு உள்ளதாகவும், மத்திய அரசு தேவையான தடுப்பூசிகளை வழங்கினால், அடுத்த 2 மாத காலத்திற்குள் மராட்டியத்தில் 6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும் என்றும் மராட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story