காஷ்மீர்: சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது எறிகுண்டு வீச்சு; பொதுமக்களில் 3 பேர் காயம்


காஷ்மீர்:  சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது எறிகுண்டு வீச்சு; பொதுமக்களில் 3 பேர் காயம்
x
தினத்தந்தி 26 Jun 2021 1:25 PM GMT (Updated: 2021-06-26T18:55:39+05:30)

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது நடந்த எறிகுண்டு வீச்சு தாக்குதலில் பொதுமக்களில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.


ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் பார்பர் ஷா என்ற பகுதியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது திடீரென எறிகுண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.  இந்த சம்பவத்தில் பொதுமக்களில் 3 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.  அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
Next Story