இன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி


இன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 27 Jun 2021 12:29 AM GMT (Updated: 27 Jun 2021 12:29 AM GMT)

மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றி வருகிறார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில், இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று  காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது.  18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் நிலையில், தடுப்பூசி தொடர்பாகவும் டெல்டா பிளஸ் கொரோனா பரவல் உள்பட பல்வேறு விஷயங்கள் பிரதமர் மோடியின் உரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Next Story