ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நமது வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை


ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நமது வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் -  மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை
x
தினத்தந்தி 27 Jun 2021 6:01 AM GMT (Updated: 2021-06-27T12:40:44+05:30)

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீர‌ர்களை Cheer4India என்ற ஹேஷ்டேக் மூலம் ஊக்குவிப்போம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. 

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:-

மிகச்சிறந்த விளையாட்டு வீரரான மில்கா சிங்கை யாரும் மறந்திருக்க முடியாது. மில்கா சிங்கின் ஒட்டுமொத்த குடும்பமே விளையாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

நமது நாட்டின் பெரும்பாலான வீரர்கள் சிறிய நகரத்தில் இருந்து வருபவர்கள். அவர்களின் கதைகளை கேட்டால் வாழ்க்கையில் எத்தனை போராட்டங்களை சந்தித்து இருப்பார்கள் என்பது நமக்கு புரியும்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நமது வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். திறமை, அர்ப்பணிப்பு, மன உறுதி, நேர்மை எல்லாம் சேரும்போது ஒரு சாம்பியன் உருவாகிறார். 

டோக்கியோவுக்குச் செல்லும் ஒவ்வொரு வீரரின்  சொந்தப் போராட்டமும், பல வருட உழைப்பும் உள்ளது. அவர்கள் தமக்காக மட்டுமல்ல, நாட்டிற்காகவும் செல்கிறார்கள். நண்பர்களே, இதுபோன்ற ஏராளமான பெயர்கள் உள்ளன, ஆனால் மன் கி பாத்தில், இன்று நான் சிலவற்றை மட்டுமே குறிப்பிட முடிந்தது.

மராட்டிய மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் ஜாதவ் ஒரு சிறந்த வில்லாளன். அவரது பெற்றோர் கூலி வேலை செய்து வருகிறார்கள். இப்போது ஜாதவ் டோக்கியோவில் தனது முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளார்.

இந்திய பெண்கள் ஆக்கி அணியில் பங்கேற்கும் நேகா கோயல், தாயார், சகோதரிகள், சைக்கிள் தொழிற்சாலையில் பணிபுரிந்து குடும்பத்தை நடத்தினர். வில்வித்தையில் பங்கேற்கும் தீபிகாவும், வாழ்க்கையில் பல ஏற்றங்கள் மற்றும் தாழ்வுகளை சந்தித்தனர்டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரரும், தங்களது வாழ்க்கையில் கடுமையான போராட்டங்கள் சந்தித்தவர்கள். 

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீர‌ர்களை Cheer4India என்ற ஹேஷ்டேக் மூலம் ஊக்குவிப்போம்

கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் நாங்கள் போராடி வருகிறோம் ... ஆனால் இந்த சண்டையில், ஒன்றாக, பல அசாதாரண மைல்கல்லை நாங்கள் அடைந்துள்ளோம் என்றார்.

Next Story