அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்தபிறகு மக்களிடம் உரையாற்றுங்கள் - ராகுல்காந்தி


அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்தபிறகு மக்களிடம் உரையாற்றுங்கள் - ராகுல்காந்தி
x
தினத்தந்தி 27 Jun 2021 9:18 AM GMT (Updated: 2021-06-27T14:48:19+05:30)

நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்தபிறகு மக்களிடம் உரையாற்றுங்கள் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் விகிதம் குறித்த ஒரு வரைபடத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி,

'நீங்கள் 'உங்கள் மனம்' சொல்வதைக் கேட்க விரும்பினாலும், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் முதலில் தடுப்பூசி கிடைக்கச் செய்யுங்கள்'  'அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்தபிறகு மக்களிடம் உரையாற்றுங்கள்' என்று மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி  'மனதின் குரல்' நிகழ்ச்சி வாயிலாக மக்களிடம் இன்று உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story