மராட்டியத்தில் இன்று மேலும் 9,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


மராட்டியத்தில் இன்று மேலும் 9,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 27 Jun 2021 4:49 PM GMT (Updated: 2021-06-27T22:19:48+05:30)

மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கடந்த மாதம் 15-ந் தேதிக்கு பிறகு கொரோனா பாதிப்பு 7 முதல் 8 ஆயிரம் வரையே இருந்தது. இந்தநிலையில் கடந்த 23-ந் தேதி பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு அடுத்த 2 நாட்கள் பாதிப்பு 9 ஆயிரத்திற்கு மேல் இருந்தது. இந்தநிலையில் 4-வது நாளாக மாநிலத்தில் 9 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது.

அதன்படி, மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும்  இன்று மேலும் 9,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60,36,821 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் இன்று மேலும் 236 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,21,286 ஆக அதிகரித்துள்ளது. 

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 8,562 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 57,90,113 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை மாநிலத்தில் 1,22,252 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story