பெங்களூரு அருகே ரூ.70 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் அழிப்பு


பெங்களூரு அருகே ரூ.70 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் அழிப்பு
x
தினத்தந்தி 27 Jun 2021 7:25 PM GMT (Updated: 27 Jun 2021 7:25 PM GMT)

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு இருந்த ரூ.70 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை அழிக்கும் பணி நடைபெற்றது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் போதைப்பொருட்கள் விற்கும் கும்பலை போலீசார் கைது செய்து வருகின்றனர். அதன்படி, கர்நாடகத்தில் கடந்த ஒரு ஆண்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்திருந்தனர். பெங்களூருவில் மட்டும் கடந்த 6 மாதத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர். 

நேற்று முன்தினம் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, கர்நாடகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டது. அதன்படி, மொத்தமாக பெங்களூரு, பெங்களூரு புறநகர் மற்றும் ரெயில்வே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு இருந்த ரூ.70 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. 

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா தாபஸ் பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் போதைப்பொருட்கள் நேற்று முன்தினம் இரவு அழிக்கப்பட்டது. கஞ்சா, பிற போதை மாத்திரைகள் என ஒட்டு மொத்தமாக 7 ஆயிரம் கிலோ போதைப்பொருட்களை அழித்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story