தேசிய செய்திகள்

இந்திய வரைபடத்தை தவறாக வெளியிட்ட டுவிட்டர்: சர்ச்சைக்குப் பிறகு நீக்கியது + "||" + Twitter Drops Incorrect India Map From Its Website Amid Calls For Action

இந்திய வரைபடத்தை தவறாக வெளியிட்ட டுவிட்டர்: சர்ச்சைக்குப் பிறகு நீக்கியது

இந்திய வரைபடத்தை தவறாக வெளியிட்ட டுவிட்டர்: சர்ச்சைக்குப் பிறகு  நீக்கியது
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளை தனி நாடாக சித்தரித்து டுவிட்டர் நிறுவனம் இந்திய வரைபடத்தை வெளியிட்டது.
புதுடெல்லி,

இந்தியாவின் புதிய டிஜிட்டல் விதிகளை கடைபிடிக்க மறுத்து வரும் டுவிட்டர் நிறுவனம் தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கை கையாண்டு வருகிறது.  இந்த நிலையில்,  இந்தியாவின் தவறான  வரைபடத்தை வெளியிட்டு டுவிட்டர் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

டுவிட்டரின் இணையதளத்தில் வேலைவாய்ப்புகள் தொடர்பான  பக்கத்தில் பிரசுரிக்கப்பட்ட இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரையும், லடாக்கையும் காணவில்லை. அதற்குப் பதிலாக இந்த பகுதிகள் சேர்ந்து தனி நாடாக குறிக்கப்பட்டுள்ளது.  

டுவிட்டர் வெளியிட்ட இந்த தவறான வரைபடம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன்கள் டுவிட்டருக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில், இந்தியாவின் தவறான வரைபடத்தை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. 

இந்தியாவின் வரைபடத்தை டுவிட்டர் நிறுவனம் தவறாக வெளியிடுவது இது முதல் முறையல்ல.  கடந்த ஆண்டு லடாக் தலைநகரான லே-வை  சீனாவின் பகுதியாக டுவிட்டர் சித்தரித்து அதற்கு இந்தியாவின் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

1. டுவிட்டர் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்; 'வலிமை' முதலிடம்
நடிகர் விஜய்யின் 'மாஸ்டர்' படத்தின் ஹேஷ்டேக் 2-ம் இடத்திலும், 'அஜித்குமார்' என்ற ஹேஷ்டேக் 4-ம் இடத்திலும், 'தளபதி 65' ஹேஷ்டேக் 5-ம் இடத்திலும் உள்ளன
2. இந்தியாவில் இந்த மண்ணின் சட்டமே செல்லும் - டுவிட்டர் குறித்து நாடாளுமன்றக் குழு விமர்சனம்
இந்தியாவில் இந்த மண்ணின் சட்டமே செல்லும் என்றும் உங்கள் கொள்கையல்ல என்றும் கூறி ட்விட்டர் சமூக தள நிறுவனத்தை நாடாளுமன்றக் குழு கடுமையாக சாடியுள்ளது.
3. டுவிட்டர் இந்தியா நிர்வாக இயக்குநருக்கு காசியாபாத் போலீஸ் நோட்டீஸ்
புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை ஏற்காததால், ‘டுவிட்டர்’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பாக வாபஸ் பெற்றது.