தேசிய செய்திகள்

பீகார்: மின்னல் தாக்கி குழந்தைகள் உள்பட 5 பேர் பலி + "||" + 5 people including 4 children died due to a lightning strike in Bihar

பீகார்: மின்னல் தாக்கி குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

பீகார்: மின்னல் தாக்கி குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி 4 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
பாட்னா,

பீகார் மாநிலம் சாஹர்சா மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. கனமழையால் அம்மாவட்டத்தின் பக்டியர்பூர் பகுதியில் கடுமையான காற்றும் மற்றும் மின்னலும் தொடர்ச்சியாக ஏற்பட்டது.

அப்போது, அப்பகுதியில் இருந்த குழந்தைகள் மீது மின்னல் தாக்கியது. இந்த மின்னல் தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 5 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒரு நபர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மின்னல் தாக்கி உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.   

தொடர்புடைய செய்திகள்

1. 6-ம் வகுப்பு மாணவன் வங்கி கணக்கில் ரூ.905 கோடி கையிருப்பு? - அதிகாரிகள் விளக்கம்
பீகாரில் 6-ம் வகுப்பு மாணவன் வங்கி கணக்கில் 905 கோடி ரூபாய் கையிருப்பு உள்ளதாக வெளியான தகவல் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
2. பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் அறிவிப்பு
பீகார் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3. பீகாரில் கனமழை வெள்ளம்; 43 பேர் பலி
பீகார் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. பீகாரில் 11 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல்
பீகார் மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் 11 கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
5. பீகார், ஜம்முவில் 2 பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்; தாக்குதல் சதி முறியடிப்பு
பீகாரை சேர்ந்த முகமது அர்மான் அலி (வயது 20), முகமது இஷானுல்லா (23) ஆகியோர் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவான லஷ்கர்-இ-முஸ்தபா அமைப்பில் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.