நரசிம்மராவ் 100-வது பிறந்தநாள்: மோடி புகழாரம்


நரசிம்மராவ் 100-வது பிறந்தநாள்: மோடி புகழாரம்
x
தினத்தந்தி 28 Jun 2021 7:19 PM GMT (Updated: 28 Jun 2021 7:19 PM GMT)

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவின் 100-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

மூத்த காங்கிரஸ் தலைவராக விளங்கிய அவரது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவின் 100-வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தேசிய மேம்பாட்டுக்காக அவரது அபரிமித பங்களிப்பை இந்தியா நினைவுகூர்கிறது. அபாரமான அறிவும், ஞானமும் பெற்றவர் அவர்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு ‘மனதின் குரல்’ வானொலி உரையில் நரசிம்மராவுக்கு மரியாதை தெரிவித்து பேசிய ஒலிப்பதிவையும் மோடி பகிர்ந்துகொண்டுள்ளார்.

Next Story