தேசிய செய்திகள்

நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள்; நரேந்திர மோடி பாராட்டு + "||" + Announcements by Nirmala Sitharaman; Narendra Modi praise

நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள்; நரேந்திர மோடி பாராட்டு

நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள்; நரேந்திர மோடி பாராட்டு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
குழந்தைகளுக்கான மருத்துவ வசதிக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உதவ முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால், அவர்களின் செலவு குறைவதுடன் வருமானம் அதிகரிக்கும். வேளாண் நடவடிக்கைகள் மீண்டு எழும்.சிறு தொழில் முனைவோர், சுயதொழில் புரிவோர், சுற்றுலா துறையினர் என பலதரப்பினருக்கும் உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் பொருளாதார நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும். உற்பத்தியும், ஏற்றுமதியும் பெருகும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளாா்.

தொடர்புடைய செய்திகள்

1. திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதில்லை
மத்திய அரசு திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதில்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதிபட தெரிவித்தார்.
2. பெண்ணுக்கு ஊக்கமும், வாய்ப்பும் அளிக்கப்படும்போது சிறப்பான பங்களிப்பை அளிக்கிறாள் - நிர்மலா சீதாராமன்
பெண்ணுக்கு ஊக்கமும், வாய்ப்பும் அளிக்கப்படும்போது சிறப்பான பங்களிப்பை அளிக்கிறாள் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
3. நல்ல அரசாங்கத்திற்கு சத்ரபதி சிவாஜியின் ஆட்சி மிகச்சிறந்த உதாரணம்: நரேந்திர மோடி
நல்ல அரசாங்கத்திற்கு சத்ரபதி சிவாஜி மன்னரின் ஆட்சி மிகச்சிறந்த உதாரணம் என மோடி கூறியுள்ளார்.
4. பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயார்: நிர்மலா சீதாராமன்
பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
5. ஐ.ஐ.டி. இயக்குனர்களுடன் நரேந்திர மோடி உரையாடல்
ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் இயக்குனர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது, மாறிவரும் சூழலுக்கேற்ப தொழில் நுட்ப கல்வியை மாற்றியமைக்குமாறு வலியுறுத்தினார்.