கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை- உத்தவ் தாக்கரே


கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை- உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 28 Jun 2021 8:17 PM GMT (Updated: 28 Jun 2021 8:17 PM GMT)

கொரோனாவில் இருந்து அவர்களை பாதுகாப்பதில் எந்த சமரசமும் செய்யப்படாது என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே நிகழ்ச்சி ஒன்றில் காணொலி வாயிலாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா தொற்றின் 3-வது அலை அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். மக்களின் ஆரோக்கியத்திற்கு எனது தலைமையிலான அரசு முன்னுரிமை அளக்கிறது. கொரோனாவில் இருந்து அவர்களை பாதுகாப்பதில் எந்த சமரசமும் செய்யப்படாது.

இதுமட்டும் இன்றி டெல்டா பிளஸ் மாறுபாட்டு அச்சுறுத்தல் உள்ளது. கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே தினசரி பாதிப்பு குறைந்து வருகிற போதிலும் மக்கள் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். ஒரு நாளைக்கு 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட நாங்கள்(மாநில அரசு) தாராக உள்ளோம்.

தொற்றுநோயின் முதல் அலையின்போது பாந்திரா குர்லா வளாகத்தில் ஒரு ஜம்போ கொரோனா சிகிச்சை மையத்தை நாம் மிக வேகமாக கட்டி முடித்தோம்.தற்போது கொரோனாவின் 3-வது அலை பாதிப்பை சமாளிக்கவும், சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காகவும் மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையத்தால் மலாடில் இந்த ஜம்போ கொரோனா சிகிச்சை மையம் கட்டப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story