எல்லையோர கிராமங்களின் பெயர்களை மாற்றுவதா? கேரளாவுக்கு கர்நாடகா தலைவர்கள் எதிர்ப்பு


எல்லையோர கிராமங்களின் பெயர்களை மாற்றுவதா? கேரளாவுக்கு  கர்நாடகா தலைவர்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 29 Jun 2021 1:22 AM GMT (Updated: 29 Jun 2021 1:22 AM GMT)

கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா , கேரளா முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு இவ்விவகாரம் குறித்து கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகா- கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது காசர்கோட் மாவட்டம். இந்த மாவட்டம் கேரளாவில் உள்ளது. இந்த மாவட்டத்தில் கன்னடம் பேசும் அதிகமான மக்கள் எல்லையோர கிராமங்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவின் உள்ளாட்சி அமைப்புகள் சில கிராமங்களின் பெயரை மாற்றியுள்ளன.

கேரள உள்ளாட்சி அமைப்புகள் மதுரு என்ற கிராமத்தின் பெயரை மதுரம், மல்லா என்பதை மல்லம் என மாற்றியுள்ளது.  கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு கர்நாடக அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா , கேரளா முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு இவ்விவகாரம் குறித்து கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்  காசர்கோட் மற்றும் மன் ஜேஸ்வர மாவட்டத்தில் கர்நாடக எல்லையில் இருக்கும் கிராமங்களின் பெயர்களை மாற்றுவதை நிறுத்த வேண்டும் என்று எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார். 


Next Story