தேசிய செய்திகள்

கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை; விழிப்புடன் செயல்பட வேண்டும் - அமைச்சர் ஹர்ஷ்வர்தன் + "||" + Second covid wave still not over, we have to be alert: Harsh Vardhan

கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை; விழிப்புடன் செயல்பட வேண்டும் - அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை; விழிப்புடன் செயல்பட வேண்டும் - அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கொரோனாவை வெல்ல வாய்ப்புள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

கொரோனா வைரசின் 2-ம் அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய சூழலில், கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதக 37 ஆயிரத்து 566 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,03,16,897 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்புகளுக்கு நேற்று ஒரே நாளில் 907 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,97,637 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பரவல் குறைய தொடங்கி உள்ளதால் இரண்டாம் அலை முடிவடைந்து விட்டது என்று பலரும் சகஜநிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை என்றும், பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “டெல்லியில் கொரோனா பாதிப்புகள் குறைந்து விட்டது உண்மைதான். ஆனால், ஒன்றரை வருடகாலமாக இருந்த கொரோனா பாதிப்பின் அனுபவங்கள் எங்களை எந்த சூழ்நிலையிலும் ஓய்வு எடுக்க கூடாது என்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறது. அதிர்ஷ்டவசமாக, கடந்த 6 மாதங்களாக தடுப்பூசியும் கிடைக்கிறது. கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதன் மூலமும் முறையாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலமும் நாம் கொரோனாவை வெல்ல வாய்ப்புள்ளது” என்று அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக 27 பேருக்கு கொரோனா
புதிதாக 27 பேருக்கு கொரோனா
2. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. மேலும் 14 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. கரூரில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
கரூரில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார்.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 118 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 118 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.