இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாட்டவர் மாலத்தீவிற்கு சுற்றுலா செல்ல அனுமதி


இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாட்டவர் மாலத்தீவிற்கு சுற்றுலா செல்ல அனுமதி
x
தினத்தந்தி 30 Jun 2021 5:40 AM GMT (Updated: 30 Jun 2021 5:40 AM GMT)

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாட்டவர் மாலத்தீவிற்கு சுற்றுலா செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி

சமீப காலமாக சமூக வலைதளங்களின் பிரபலங்களின் புகைப்படங்கள் நிரம்பி வழிந்தன பாலிவுட், கோலிவுட் என சினிமா பிரபலங்களும், விளையாட்டுப் பிரபலங்களும் குடும்பத்தோடு மாலத்தீவுக்கு படையெடுத்து, அங்கிருந்து தான் புகைப்படங்களை எடுத்து தள்ளினார்கள்.

இந்த நிலையில் கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக மே மாதம் 13 ஆம் தேதி  இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாட்டவருக்கு மாலத்தீவு அரசு பயணத் தடை விதித்தது.

இந்தியாவில் கொரோனாஇரண்டாவது அலை குறைந்து வருவதால் வருவதால் உலகம் மெதுவாக இந்தியர்களுக்கான கதவுகளை மீண்டும் திறக்கத் தொடங்கிய உள்ளது. 

கொரோனாவால் வீட்டைவிட்டு வெளியே போகமுடியாமல்  முடங்கிக் கிடந்த பிரபலங்களின் சுற்றுலா மனநிலையை மீண்டும் தூண்டும் விதமாக  தற்போது வரும் 15 ஆம் தேதி முதல் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்கள் மாலத்தீவுகளுக்கு வர அனுமதி வழங்கப்படும் என அதிபர் இப்ராகிம் முகம்மத் சோலிஹ் அறிவித்துள்ளார். 

கொரோனோ சோதனையில்  நெகடிவ்  சான்றிதழ் மட்டும் இதற்கு போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து ஒரு லட்சம் பயணிகளுக்கு மேல் மாலத்தீவு சென்று உள்ளனர்.

முழுக்க முழுக்க சுற்றுலாவையே நம்பி இருக்கும் ஒரு அதிசய நாடுதான் மாலத்தீவு. மிகவும் குட்டி நாடு.கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் மேல் நீர் தான் இருக்கிறது மாலத்தீவில்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளின் தொகுப்பு மாலத்தீவு. அழகழகான கடற்கரைகள், நெஞ்சம் கொள்ளை கொள்ளும்  இயற்கை காட்சிகள் என சுற்றுலாப் பயணிகளை கவரும் பல விஷயங்கள் மாலத்தீவில் உள்ளன. 2009ம் ஆண்டு இந்த நாட்டின் அமைச்சரவைக் கூட்டம் கடலுக்கு அடியில் நடத்தப்பட்டது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

மாலத்தீவின் தலைநகரான மேலில் இருக்கும் தேசிய அருங்காட்சியகம், ஹுல் ஹுமாலே தீவு ஆகியவை சுற்றுலாப் பயணிகள் அதிகம் சுற்றிப்பார்க்கும் முக்கிய இடங்கள். மேலில் இருக்கும் வெள்ளி ஜும்மா மசூதி உலகின் பழமையான மசூதிகளில் ஒன்று.

மாலத்தீவில் சுற்றுலாத் தலம் எல்லாமே தீவுகளை ஒட்டியவைதான்.

மாலத்தீவிற்கு கொச்சியில் இருந்து கப்பல் மூலமாகவோ, சென்னையில் இருந்து விமானம் மூலமாகவோ செல்லலாம். கப்பல் மூலம் செல்வதற்கு ஒன்றில் இருந்து இரண்டு நாட்கள் ஆகும். விமானம் மூலம் செல்வதற்கு இரண்டு மணிநேரம் ஆகும். சென்னையில் இருந்து சீசனுக்கு ஏற்ப டிக்கெட் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. 

அதேபோல், விமான டிக்கெட்டுகளுடன் கூடிய முழு பேக்கேஜ்களும் பல கிடைக்கின்றன. இந்தியர்களுக்கு முன்னதாகவே விசா தேவையில்லை. பயணம் செய்தாலே அங்கு 90 நாள்களுக்கான விசா வழங்கப்படும். அதற்காக ஒரிஜினல் பாஸ்போர்ட் உள்ளிட்ட சில ஆவணங்களும் தேவை. தற்போது கொரோனா நேரம் என்பதால், அதற்கான சில கட்டுப்பாடுகளும் தற்போது உள்ளன.



Next Story