உத்தவ் தாக்கரேயுடனான சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை: சரத்பவார்


உத்தவ் தாக்கரேயுடனான சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை: சரத்பவார்
x
தினத்தந்தி 1 July 2021 7:37 PM GMT (Updated: 1 July 2021 7:37 PM GMT)

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயுடனான சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

முதல்-மந்திரியுடன் சந்திப்பு
மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, பிரதமர் நரேந்திர மோடியை தனிமையில் சந்தித்து பேசியது கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன 
தலைவரும், மகா விகாஸ் கூட்டணி உருவாக காரணமாக இருந்தவருமான சரத்பவார் சமீபத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரத்பவார் நேற்று கூறியதாவது:-

அரசியல் இல்லை
முதல்-மந்திரியுடனான எனது சந்திப்பில் அரசியல் ரீதியாக எதும் விவாதிக்கப்படவில்லை. சில முடிவுகளை விரைவாக எடுக்கவேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக இருந்தது. மாநில அரசின் வளர்ச்சி திட்டங்களை எவ்வாறு விரைவுபடுத்துவது என்பது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. இது அரசியல் கலந்துரையாடல் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story