தேசிய செய்திகள்

3-வது அலை அச்சுறுத்தல்- மருத்துவ உள்கட்டமைப்பு சிறப்பு தயாராகியுள்ளது: நிர்மலா சீதாராமன் + "||" + Medical Infra "Well Prepared" For Possible Third Covid Wave: Finance Minister

3-வது அலை அச்சுறுத்தல்- மருத்துவ உள்கட்டமைப்பு சிறப்பு தயாராகியுள்ளது: நிர்மலா சீதாராமன்

3-வது அலை அச்சுறுத்தல்- மருத்துவ உள்கட்டமைப்பு சிறப்பு தயாராகியுள்ளது: நிர்மலா சீதாராமன்
கொரோனா 3-வது அலை வந்தால் அதை எதிர்கொள்ள இந்திய மருத்துவத்துறையின் உள்கட்டமைப்பு சிறப்பாகத் தயாராகியுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.
புதுடெல்லி,

இந்திய உலகளாவிய கூட்டமைப்பின் கூட்டம் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக   மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

கொரோனா 3-வதுஅலையை மக்கள் யாரும் விரும்பவில்லை. ஒருவேளை 3-வது அலை ஏற்பட்டால், அதை எதிர்கொள்ளவும், சமாளிக்கவும் இந்திய மருத்துவத்துறையின் உள்கட்டமைப்பு சிறப்பாகத் தயாராகியுள்ளது. அதில் கூடுதலான கவனத்தை அரசு செலுத்தியுள்ளது. மெட்ரோ நகரங்களில் மட்டும் அல்லாமல் 2-ஆம் வகை, 3-ஆம் வகை நகரங்களிலும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளோம்.

நாள்தோறும் 45 லட்சம் முதல் 50 லட்சம் மக்கள் வரை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 33 கோடி மக்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி செலுத்தும் பணி நகர்ந்து வருவதைப் பார்க்கும் போது, தொற்றால் எளிதாகப் பாதிக்கப்படும் மக்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்தி கொரோனாவிலிருந்து காக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதில்லை
மத்திய அரசு திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதில்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதிபட தெரிவித்தார்.
2. தமிழகத்தில் கொரோனா 3-வது அலையை தடுக்க நாளை மறுதினம் மாபெரும் தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் கொரோனா 3-வது அலையை தடுப்பதற்காக நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
3. மராட்டியத்தில் மட்டும் தான் கொரோனா 3-வது அலை; மத்திய மந்திரி நாராயண் ரானே விமர்சனம்
நாட்டில் வேறு எங்கும் இல்லை, மராட்டியத்தில் மட்டும் 3-வது கொரோனா அலை உள்ளது என மத்திய மந்திரி நாராயண் ரானே விமர்சித்து உள்ளார்.
4. பெண்ணுக்கு ஊக்கமும், வாய்ப்பும் அளிக்கப்படும்போது சிறப்பான பங்களிப்பை அளிக்கிறாள் - நிர்மலா சீதாராமன்
பெண்ணுக்கு ஊக்கமும், வாய்ப்பும் அளிக்கப்படும்போது சிறப்பான பங்களிப்பை அளிக்கிறாள் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
5. பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயார்: நிர்மலா சீதாராமன்
பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.