தேசிய செய்திகள்

வன்னியர் சமூகத்துக்கான 10.5% உள் ஒதுக்கீடுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட் + "||" + An interim injunction cannot be imposed on the 10.5% internal allocation for the Vanniyar community- supreme court

வன்னியர் சமூகத்துக்கான 10.5% உள் ஒதுக்கீடுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்

வன்னியர் சமூகத்துக்கான 10.5% உள் ஒதுக்கீடுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்
உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட மனு மீது தமிழக அரசு பதிலளிக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,

வன்னியர் சமூகத்துக்கான 10.5% உள்ஒதுக்கீடுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என தமிழகத்தை சேர்ந்த இருவர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் வன்னியர் சமூகத்திற்கு அளிக்கப்பட்ட10.5 சதவீத உள் ஒதுக்கீடுக்கு எதிராக சென்னையை சேர்ந்த இருவர் சுப்ரீம் கோர்ட்டில்  மனு தாக்கல் செய்தனர்.  

இந்த மனுக்களை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்,  ”10.5 சதவீத உள் இட ஒதுக்கீடுக்கு எதிராக இடைக்கால தடை விதிக்க முடியாது. ஏற்கனவே, இதே விவகாரம் தொடர்பாக மதுரையை சேர்ந்த அபிஷ்குமார் தாக்கல் செய்த மனுவுடன் இந்த வழக்குகளும் விசாரிக்கப்படும். இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பத்மநாப சுவாமி கோவில் அறக்கட்டளையின் கோரிக்கை நிராகரிப்பு - சுப்ரீம் கோர்ட்டு
வகாரத்தில் திருவிதாங்கூா் அரச குடும்பத்தின் அறக்கட்டளைக்கு விலக்களிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
2. சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் போலி செய்திகள் -சுப்ரீம் கோர்ட் கவலை
சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் போலி செய்திகள் பரவுவது குறித்து சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்து உள்ளது.
3. சுப்ரீம் கோர்ட்: முதல் முறையாக ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவி ஏற்பு
9 நீதிபதிகளுக்கும் இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது .
4. சுப்ரீம் கோர்ட்டுக்கு 3 பெண் நீதிபதிகள் உள்பட புதிதாக 9 நீதிபதிகள் நியமனம் மத்திய அரசு ஒப்புதல்
சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த 9 பேரின் பெயர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
5. எம்.பியால் பாலியால் பலாத்காரம்: சுப்ரீம் கோர்ட் அருகே தீக்குளித்த இளம்பெண் உயிரிழப்பு
பகுஜன் சமாஜ் கட்சி எம்.பியான அதுல் ராய் மீது இளம்பெண் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீசாரிடம் சரண் அடைந்த அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.