தேசிய செய்திகள்

நாடு முழுவதும் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 34 கோடியை தாண்டியது + "||" + India's vaccination coverage crosses landmark of 34 crore

நாடு முழுவதும் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 34 கோடியை தாண்டியது

நாடு முழுவதும் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 34 கோடியை தாண்டியது
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி இலவசம் என்ற திருத்தப்பட்ட புதிய தடுப்பூசி கொள்கை ஜூன் 21ஆம் தேதி முதல் அமலில் உள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் தற்போது கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என படிப்படியாக தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. 

தற்போது நாடு முழுவதும் 18-வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசியே சிறந்த பாதுகாப்பு கவசமாக கருதப்படுவதால், முழு வீச்சில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 34 லட்சத்தை தாண்டியுள்ளது. 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் கூறப்பட்டு இருப்பதாவது:- நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 42,64,123 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  மொத்தம் 34,00,76,232 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில், 27,94,54,091 பேர் முதல் தவணையும் 6,06,22,141 பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டுள்ளனர். 

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, பீகார், குஜராத், கர்நாடகா மற்றும் மராட்டியம் ஆகிய 8 மாநிலங்களில் 18-44 வயது வரம்பில், 50 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 135 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 135 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
2. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
3. புதிதாக 141 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 141 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 3 போ் தொற்றுக்கு பலியாகினா்.
4. இங்கிலாந்தில் புதிதாக 39,950- பேருக்கு கொரோனா தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 39,950- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஜூலை 19: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் இன்று 1,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.