தேசிய செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 6 மாநிலங்களுக்கு மத்திய குழு அனுப்பி வைப்பு + "||" + Increasing Corona Vulnerability: Central Committee Visit to 6 states

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 6 மாநிலங்களுக்கு மத்திய குழு அனுப்பி வைப்பு

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 6 மாநிலங்களுக்கு மத்திய குழு அனுப்பி வைப்பு
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மாநிலங்களுக்கு மத்திய குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை பாதிப்பு உச்சம் பெற்று தற்போது குறையத்தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக வேகமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில்,  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,617- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 04 லட்சத்து 58 ஆயிரத்து 251- ஆக உள்ளது.  நாடுமுழுவதும் கொரோனா தொற்று பாதிப்புடன் 5 லட்சத்து 09 ஆயிரத்து 637 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கேரளா, அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சட்டீஸ்கர், மணிப்பூர் ஆகிய 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு உயர்மட்டக் குழுவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதலில் இந்தக் குழுக்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆறு மாநிலங்களும் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து முதல் தகவலைத் திரட்டும். பின்னர் அங்கே மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு பேர் கொண்ட குழு செல்லும். அதில் ஒருவர் மருத்துவ நிபுணராகவும், மற்றுமொருவர் பொது சுகாதாரத் துறை நிபுணராகவும் இருப்பார்.

இந்தக் குழுவினர் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு நடவடிக்கை முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்.  அங்கு, கொரோனா பரிசோதனை, கண்காணிப்பு, கட்டுப்பாடுகள் பகுதியை உருவாக்குதல் ஆகியனவற்றை கண்காணிப்பார். மேலும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்றுகின்றனரா என்பதையும் ஆராய்வர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைவு
தமிழகத்தில் நேற்று 1,669- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
2. சென்னையில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னையில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. உத்தர பிரதேசத்தில் 130 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்ட நபர்
உத்தர பிரதேசத்தில் 130 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பில் இருந்து நபர் ஒருவர் விடுபட்டு உள்ளார்.
4. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
கடந்த 3 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.
5. திருச்சியில் 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு
திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலைய முதல்நிலை காவலர் உட்பட 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.