தேசிய செய்திகள்

ஆந்திராவில் புதிதாக 3,464 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Andhra Pradesh reports 3,464 new positive cases

ஆந்திராவில் புதிதாக 3,464 பேருக்கு கொரோனா தொற்று

ஆந்திராவில் புதிதாக 3,464 பேருக்கு கொரோனா தொற்று
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,464 பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அமராவதி,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி,

ஆந்திரத்தில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 3,464 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,96,818ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,779-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 4,284 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 18,48,716ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 37,323 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.