இந்தியாவில் கொரோனா முதல் அலையில் மருந்துகள் தவறாக பயன்படுத்தப்பட்டன; ஆய்வில் தகவல்


இந்தியாவில் கொரோனா முதல் அலையில் மருந்துகள் தவறாக பயன்படுத்தப்பட்டன; ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 2 July 2021 7:04 PM GMT (Updated: 2 July 2021 7:04 PM GMT)

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆன்டிபயாடிக் என்று அழைக்கப்படுகிற நுண்ணுயிர்க்கொல்லி மருந்து பயன்பாடு தொடர்பாக அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி உள்ளனர்.

இதன் முடிவுகள் வெளியாகி உள்ளன. அது வருமாறு:-

* இந்தியாவில் கடந்த ஆண்டு தாக்கிய கொரோனாவின் முதல் அலையின்போது லேசான, மிதமான பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ஆன்டிபயாடிக் என்று அழைக்கப்படுகிற நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

* இந்த தொற்றால் 21.64 கோடி அதிகப்படியான டோஸ் ஆன்டிபயாடிக் மருந்துகள், 3.8 கோடி டோஸ் அஜித்ரோமைசின் மருந்துகள் ஜூன் 2020 முதல் செப்டம்பர் 2020 வரையிலான உச்சகட்ட காலத்தில் வழங்கப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

* இது தவறான பயன்பாடு ஆகும். ஏனென்றால் பாக்டீரியா தொற்றுகளுக்கு மட்டுமே ஆன்டிபயாடிக் நன்றாக செயல்படும். கொரோனா போன்ற வைரஸ் தொற்றுகளுக்கு அல்ல.

*ஆன்டிபயாடிக் மருந்துகளின் அதிகப்படியான பயன்பாடு, சிறிய காயங்கள் மற்றும் நிமோனியா போன்ற பொதுவான தொற்றுகளுக்கு திறம்பட சிகிச்சை அளிக்கிற திறனை குறைக்கிறது. இது. இந்தப்பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோருக்கு நிலைமையை மோசமாக்கலாம் அல்லது மரணத்துக்குகூட வழிவகுக்கலாம்.

* இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டுமே 1,629 கோடி டோஸ் ஆன்டிபயாடிக் மருந்துகள் விற்பனையாகி உள்ளன. இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

* இந்தியாவில் கொரோனா பாதித்த அனைவருக்கும் ஆன்டிபயாடிக் மருந்து அளிக்கப்பட்டுள்ளது என்பதையே எங்கள் முடிவுகள் காட்டுகின்றன.

* அஜித்ரோமைசின் மருந்துகள் விற்பனை 2020-ல் 5.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story