தேசிய செய்திகள்

2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 98 சதவீதம் உயிருக்கு பாதுகாப்பு: நிதி ஆயோக் உறுப்பினர் தகவல் + "||" + Both Doses Of Vaccine Give 98 per cent Protection From Death Due To Covid: NITI Aayog member

2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 98 சதவீதம் உயிருக்கு பாதுகாப்பு: நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்

2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 98 சதவீதம் உயிருக்கு பாதுகாப்பு: நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் இத்தொற்றால் உயிருக்கு ஆபத்தில்லை என்பது ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பஞ்சாப் அரசுடன் இணைந்து நடத்திய ஆய்விலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளை சுட்டிக்காட்டி, தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டால் 98 சதவீதம் உயிருக்கு பாதுகாப்பு என்று நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால் நேற்று தெரிவித்தார்.முன்களப் பணியாளர்களான போலீசாரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தடுப்பூசியே செலுத்திக்கொள்ளாத 4 ஆயிரத்து 868 போலீசாரில் 15 பேர் கொரோனா தொற்றில் இறந்ததும், தடுப்பூசியின் ஒரு டோஸ் போட்டுக்கொண்ட 35 ஆயிரத்து 856 பேரில் 9 பேர் இறந்ததும் தெரியவந்தது. ஆனால் 2 டோஸ்களும் போட்டுக்கொண்ட 42 ஆயிரத்து 720 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 2 பேர் மட்டுமே பலியானது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை சுட்டிக்காட்டிய வி.கே.பால், ‘போலீசார் அதிக ஆபத்தான சூழலில் பணியாற்றுவதால் அவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்படி, ஒரு டோஸ் தடுப்பூசி 92 சதவீதம் பாதுகாப்பானது என்றும், 2 டோஸ்கள் 98 சதவீதம் பாதுகாப்பானது என்றும் தெரியவந்துள்ளது’ என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நிதி ஆயோக் செயல்பாட்டில் முதலிடம்; இந்தியாவிற்கு கேரளா முன்மாதிரி - பினராயி விஜயன் அறிக்கை
நிதி ஆயோக் செயல்பாட்டில் முதலிடம் பிடித்ததன் மூலம் கேரள மாநிலம் இந்தியாவிற்கு முன் மாதிரியாக திகழ்கிறது என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.