தேசிய செய்திகள்

கோவேக்சின் தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியீடு + "||" + Covaxin Overall 77.8% Effective, Claims Bharat Biotech In Phase 3 Data

கோவேக்சின் தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியீடு

கோவேக்சின் தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியீடு
கொரோனா அறிகுறிகள் ஏற்படாமல் தடுப்பதில் கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டது என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவேக்சின் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்த தடுப்பூசியாது கொரோனா பாதிப்பு அதிகம்  ஏற்படாமல் தடுப்பதில் கோவாக்சின் தடுப்பூசி 93.4 சதவீதம் செயல் திறன் கொண்டதாக உள்ளது. 

 130 கொரோனா நோயாளிகளிடம் கோவாக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்தி முடித்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் இவ்வாறு அறிவித்துள்ளது. கொரோனா அறிகுறிகள் ஏற்படாமல் தடுப்பதில்  கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்படுகிறது என்றும் டெல்டா வைரஸுக்கு எதிராக 65.2% செயல்திறன் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பூசி தட்டுப்பாடு; கோவேக்சின் முதல் டோஸ் செலுத்தப்படுவதில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கோவேக்சின் முதல் டோஸ் தடுப்பூசி தற்போது செலுத்தப்படுவதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
2. உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியுடன் சுகாதார மந்திரி சந்திப்பு
கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரே தடுப்பூசி கோவேக்சின் ஆகும். பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த இந்த தடுப்பூசியை பல நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. மேலும் உலக சுகாதார நிறுவனமும் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை.
3. கோவிஷீல்டு உற்பத்தி திறன் 120 மில்லியனாக அதிகரிக்கப்படும்: மத்திய அரசு
கோவிஷீல்டு உற்பத்தி திறன் 120 மில்லியனாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. கோவேக்சின் டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு எதிராக செயல் திறன் மிக்கது: ஆய்வில் தகவல்
டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுகிறது என ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5. கோவேக்சின் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி ரத்து: பிரேசில்
கோவேக்சின் தடுப்பூசி ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக பெரும் சர்ச்சையைான நிலையில், பிரேசிலுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்தது.