தேசிய செய்திகள்

ஜி-20 வரி ஒப்பந்த கட்டமைப்பில் இந்தியா இணைந்தது + "||" + India joins G20 tax deal framework

ஜி-20 வரி ஒப்பந்த கட்டமைப்பில் இந்தியா இணைந்தது

ஜி-20 வரி ஒப்பந்த கட்டமைப்பில் இந்தியா இணைந்தது
பொருளாதார கூட்டுறவு வளர்ச்சி அமைப்பு (OECD)/ஜி20 வரி ஒப்பந்த கட்டமைப்பில் இந்தியா இணைந்துள்ளது.
புதுடெல்லி,

பொருளாதார டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக எழுந்த வரிப் பிரச்சினைகளுக்கு ஒருமனதான தீர்வு காணவும், லாபத்தை மாற்றிக் கொள்ளவும், இந்தியா உட்பட பொருளாதார கூட்டுறவு வளர்ச்சி அமைப்பில் (OECD)/ஜி20 உள்ள பெரும்பாலான நாடுகள், ஒரு உயர் நிலை அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளன.

இந்த அறிக்கையில் முன்மொழியப்பட்ட தீர்வு இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது - முதல் தூண்: இது சந்தை அதிகார வரம்புகளுக்கு, கூடுதல் லாபத்தை மறு ஒதுக்கீடு செய்வது. இரண்டாவது தூண்: குறைந்தபட்ச வரி மற்றும் வரி விதிகளுக்கு உட்பட்டது.

இந்த தீர்வுக்கான அடிப்படை கோட்பாடுகள், சந்தைகளுக்கு அதிக இலாபத்தைப் பெற வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளன. எனவே இந்த தீர்வுக்கு இந்தியா ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்த தீர்வு, வளரும் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு அர்த்தமுள்ள மற்றும் நிலையான வருவாயை ஒதுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் மாதத்திற்குள் முதலாவது தூண் மற்றும் இரண்டாவது தூண் ஆகியவற்றை ஒரு தொகுப்பாக அமல்படுத்த இந்தியா தொடர்ந்து ஆக்கபூர்வமாக செயல்படும் என்றும் சர்வதேச வரிகொள்கையின் முன்னேற்றத்திற்கு சாதகமாக பங்களிக்கும் என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒலிம்பிக் மகளிர் ஆக்கி போட்டி: இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் ஜெர்மனி வெற்றி
ஒலிம்பிக் மகளிர் ஆக்கி போட்டியில், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில் ஜெர்மனி அணி வெற்றிபெற்றுள்ளது.
2. டேபிள் டென்னிஸ்: இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, மணிகா பத்ரா இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்
ஒலிம்பிக் தொடரில் டேபிள் டென்னிஸ் பிரிவில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், இந்தியாவின் மணிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
3. ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு:-
4. இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்தியா முதலில் பேட்டிங்
இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் உள்பட 5 வீரர்கள் அறிமுக வீரர்களாக களம் இறங்கியுள்ளனர்.
5. இந்தியா, வர்த்தகம் செய்ய சவாலான இடமாக உள்ளது: அமெரிக்கா
இந்தியா, வர்த்தகம் செய்வதற்கு சவாலான இடமாக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.