தேசிய செய்திகள்

இந்தியாவில் மேலும் 44,111-பேருக்கு கொரோனா-சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்திற்கு கீழ் குறைந்தது + "||" + India reports 44,111 new #COVID19 cases, 57,477 recoveries, and 738 deaths in the last 24 hours, as per the Union Health Ministry.

இந்தியாவில் மேலும் 44,111-பேருக்கு கொரோனா-சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்திற்கு கீழ் குறைந்தது

இந்தியாவில் மேலும் 44,111-பேருக்கு கொரோனா-சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்திற்கு கீழ் குறைந்தது
இந்தியாவில் தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 738- பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,111- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 57,477- பேர் ஒரே நாளில் குணம் அடைந்துள்ள நிலையில், தொற்று பாதிப்புக்கு மேலும் 738- பேர் உயிரிழந்துள்ளனர்.  

நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 05 லட்சத்து 02 ஆயிரத்து 362- ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 96 லட்சத்து 05 ஆயிரத்து 779- ஆக உள்ளது.  தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 95 ஆயிரத்து 533- ஆக சரிந்துள்ளது. 

தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 01 ஆயிரத்து 050- ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 34 கோடியே 46 லட்சத்து 11 ஆயிரத்து 291- ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைவு
தமிழகத்தில் நேற்று 1,669- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
2. கொரோனா பாதிப்பு: டெல்லியில் இன்று உயிரிழப்பு இல்லை
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. 8 பேருக்கு கொரோனா தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. அரியலூரில் கொரோனாவுக்கு பெண் பலி
அரியலூரில் கொரோனாவுக்கு பெண் பரிதாபமாக இறந்தார்.
5. மராட்டியத்தில் மேலும் 3,586- பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,586-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.