இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43.99- லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43.99- லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 3 July 2021 6:39 AM GMT (Updated: 3 July 2021 6:39 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43.99- லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோன தடுப்பூசி கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது. முதலில் மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் படிப்படியாக தடுப்பூசி திட்டம் விரிவு படுத்தப்பட்டது. கடந்த மே 1 ஆம் தேதி முதல் 18-வயது மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

இதையடுத்து, கடந்த ஜூன் 21 ஆம் தேதி புதிய தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் 18-வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதன்பிறகு நாட்டில், நாள்தோறும் லட்சகணக்கானோருக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 43.99- லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 7 மணி நிலவரப்படி இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 34 கோடியே 46 லட்சத்து 11 ஆயிரத்து 291 ஆகும். 

Next Story