தேசிய செய்திகள்

சுவேந்து அதிகாரிக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்க கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு + "||" + Calcutta HC directs Bengal govt to provide security to Suvendu Adhikari

சுவேந்து அதிகாரிக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்க கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு

சுவேந்து அதிகாரிக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்க கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
சுவேந்து அதிகாரிக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மே.வங்க அரசுக்கு கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா,

மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அம்மாநில பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரிக்கு மீண்டும் மாநில அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலில் மம்தாவை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். எனினும், மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. இதையடுத்து, கடந்த மே 18-ம்தேதி சுவேந்து அதிகாரிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மே.வங்க அரசு விலக்கிக்கொண்டது. சுவேந்து அதிகாரி மத்திய அரசின் இசட் பிளஸ் பாதுகாப்புடன் இருப்பதால் அவருக்கு மாநில அரசின் பாதுகாப்பு தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தனக்கு விலக்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப வழங்கக்கோரி சுவேந்து அதிகாரி சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட்,  பாதுகாப்பை மீண்டும் வழங்க உத்தரவிட்டது. 


தொடர்புடைய செய்திகள்

1. மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம்: கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
நீதிபதி கவுசிக் சந்தாவுக்கு பாஜக தலைவர்களுடன் தொடர்பு என மம்தா பனர்ஜி தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டியிருந்தார்.
2. சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து மம்தா மனு- கொல்கத்தா ஐகோர்ட் இன்று விசாரணை
நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதியில், பா.ஜ.க.,வின் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதை எதிர்த்து, மம்தா பானர்ஜி கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
3. நிவாரண பொருட்களை திருடியதாக சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு
நிவாரண பொருட்களை திருடியதாக சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.