சட்டவிரோத பண பரிமாற்றம்: அனில் தேஷ்முக் ஜூலை 5ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 July 2021 10:30 AM GMT (Updated: 3 July 2021 10:30 AM GMT)

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, அனில் தேஷ்முக் நாளை மறுதினம் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

மும்பை, 

மராட்டிய மாநில உள்துறை மந்திரியாக இருந்த அனில்தேஷ்முக் மீது ஐ.பி.எஸ். அதிகாரி பரம்பீர் சிங் ரூ.100 கோடி மாமூல் புகாரை கூறினார். இந்த புகார் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு தொடர்பாக 
அமலாக்கத்துறை அனில்தேஷ்முக்கின் நேர்முக உதவியாளர் குந்தன் ஷிண்டே, தனிச்செயலாளர் சஞ்சீவ் பாலன்டே ஆகியோரை கைது செய்தனர். 

மேலும் அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராகுமாறு அனில் தேஷ்முக்கிற்கு சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் ஆஜராகததை தொடர்ந்து 2-வது முறையாகவும் சம்மன் அனுப்பினர். ஆனால் உடல்நிலையை காரணம் காட்டி அவர் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் அமலாக்கத்துறை இன்று 3-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. அதில் ஜூலை 5-ம் தேதிக்குள் மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story